
வன்னிப் பிரதேசத்தில் வாழைப்பழத்தின் விலை உயர்வடைந்துள்ளதுடன் தரமான பழத்துக்குத் தட்டுப்பாடும் நிலவுகிறது. இதனால் கதலி வாழைப்பழம் ஒரு கிலோ கிராம் 200 ரூபாய் வரையிலும் கப்பல் வாழைப்பழம் 250 தொடக்கம் 300 ரூபாய் வரையிலும் இதரை வாழைப்பழம் 200 தொடக்கம் 250 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது.
இது கோடைகாலம் என்பதால் பழ வகைகளுக்கான கோரல் அதிகமாக இருக்கிறது. மக்களின் தேவையை நிறைவு செய்யக் கூடிய அளவுக்கு உள்நாட்டுப் பழ உற்பத்தி போதாது. பழங்களுக்கான பருவ காலம் இது இல்லை என்பதுடன் வெளிநாட்டுப் பழங்களான அப்பிள், ஒரேஞ் போன்றவை தடை செய்யப்பட்டிருப்பதும் பழங்களின் விலை உயர்வுக்குக் காரணம் என்று பழ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை நாவற்பழம் சந்தைக்கு வந்துள்ளது. கிலோ 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.