வனிதா மீது அதிரடி புகார்! மேலும் தொடர்கிறது நீதிமன்ற வழக்கு – அடுத்த சர்ச்சை

கடந்த சில நாட்களாக வனிதா பீட்டர் பால் திருமணம் குறித்த சர்ச்சைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டதும், விவாதிக்கப்பட்டதும் பழகிப்போன ஒன்றாக தெரிந்தது. அதே வேளையில் வனிதாவின் பேச்சு நடவடிக்கைகளுக்கும் கடும் எதிர்ப்பு நிலவியது.

இந்நிலையில் வனிதா மீது அண்மையில் சென்னை போரூர் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

காரணம் என்னவெனில் சென்னை அய்யப்பந்தாங்கலில் உள்ள குடியிருப்பில் கொரோனா காலகட்டத்தில் முறையான அனுமதியின்றி திருமணம் நடத்தியுள்ளதாகவும், அளவுக்கு அதிகமாக கூட்டத்தை கூட்டியுள்ளதாகவும் அக்குடியிருப்பின் பொதுச்செயலாளர் நிஷா கோத்தாரி புகார் அளித்துள்ளாராம்.

இதனால் தான் வனிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாம்.

முகநூலில் நாம்