வட கொரியா மக்களுக்காக  கண்கலங்கிய அதிபர் கிம்

வடகொரியாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளிலிருந்து மீண்டுவரவும், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ராணுவ வீரர்களுக்கு நன்றி கூறியதுடன், குடிமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தத் தவறியதற்கு மன்னிப்புக் கேட்டார்.

அக்டோபர் 10, 1945-ம் ஆண்டு வடகொரியாவின் தொழிலாளர் கட்சி தொடங்கப்பட்டது. அன்று முதல் கிம் ஜாங் உன்-னின் குடும்பத்தினர் வடகொரியாவை ஆட்சிசெய்து வருகின்றனர். தற்போது அதிபர் பதவியிலிருக்கும் கிம் ஜாங் உன் அதிரடியான நடவடிக்கைகளுக்குப் புகழ்பெற்றவர். சமீபத்தில் இவர் இறந்துவிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகிவந்த நிலையில் திடீரென பொது விழாக்களில் பங்கேற்று, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதையடுத்து, வடகொரியாவை ஆட்சி செய்யும் தொழிலாளர் கட்சி தோற்றுவிக்கப்பட்டு, 75-ம் ஆண்டு நிறைவு தினம் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி வழக்கம்போல் கொண்டாடப்படுமா என்ற கேள்வி இருந்துவந்த நிலையில், எந்த வருடமும் இல்லாத வகையில் வட கொரியா முழுவதும் விழாக்கோலம் பூண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்