வடமாகாண வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர்- வடமாகாண ஆளுநர்!

வடமாகாணத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் தயாராகவுள்ளதாக வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலைத் தடுக்கும் செயற்பாடுகளுடன் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுகளையும் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடமாகாண அமைச்சுக்களின் செயற்பாடுகள் தொடர்பான மாதாந்த மீளாய்வுக் கூட்டம் வடமாகாண ஆளுநர் தலைமையில் நேற்று வட மாகாண ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்படுகின்ற மருத்துவ சோதனைகளுடன் போதைப் பொருட்களின் பயன்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக பாடசாலைகள் மீளச்செயற்படத் ஆரம்பித்துள்ள நிலையில், அதனை முன்னெடுப்பதன் மூலம் இளம் சமுதாயத்தின் எதிர்காலத்தினை பாதுகாத்து நல்வழிப்படுத்த முடியும் என்று வடமாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

முகநூலில் நாம்