வடமாகாண தொற்று நோய் வைத்தியசாலைக்கு 40 நோயாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் வடமாகாண தொற்று நோய் வைத்தியசாலை அண்மையில் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கவிடயம்.


அந்த வகையில் கிளிநொச்சி தொற்று நோய் வைத்தியசாலைக்கு இன்று சுமார் 40 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


யாழ் மருதங்கேணி வைத்திய சாலை தற்காலிகமாக கொரோனா சிகிச்சை நிலையமாக இயங்கி வந்தது. அங்கு சிகிச்சை பெற்று வந்த 30 பேரும்.
முல்லைத்தீவு முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த 10 பேரும் இன்று அழைத்து வரப்பட்டுள்ளனர்.


200 பேர் சிகிச்சை பெறும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் உள்ள வடமாகாண தொற்று நோய் வைத்தியசாலை முதற்கட்டமாக இன்று 40 பேர் அனுமதிக்கப்படவுள்ளனர்.


இந்தநிலையில் குறித்த தொற்று நோயியல்வைத்தியசாலை வடமாகாணத்திற்கான தொற்று நோயியல் வைத்தியசாலை இயங்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்