
யாழ். போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை பிரிவில் கடந்த வருடத்தோடுஒப்பிடும்போது இந்த வருடம் சுமார் 3,000க்கும் மேற்பட்ட நீரிழிவுநோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலைநீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி விசேட வைத்திய நிபுணர் அரவிந்தன்தெரிவித்துள்ளார்.வடபகுதியில் நீரிழிவு நோயின் தாக்கம் தொடர்பில் கருத்துரைக்கும் போதுமேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,நீரிழிவு நோயின் தாக்கம் தொடர்பில் மிக அண்மைய தரவுகளின் படி கொழும்புமாகாணத்தில் குறிப்பாக மேல் மாகாணத்தில் 30% மானோருக்கு நீரிழிவு நோயின் தாக்கம் காணப்படுகின்றது.யாழ்ப்பாண மாவட்டத்தில் 15% சதவீதமானவர்களுக்கு நீரிழிவு நோயின் தாக்கம்காணப்படுகின்றது.நீரிழிவு நோய் தொடர்பிலான ஆய்வுகளை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம்.யாழ். போதனா வைத்தியசாலையில் நீரிழிவு சிகிச்சை பிரிவை எடுத்துக்கொண்டால் கடந்த வருடத்தோடு ஒப்பிடும் போது இந்த வருடம் சுமார்3,000-க்கும் மேற்பட்ட நோயாளர்கள் புதிதாக பதிந்திருக்கின்றார்கள்.அதாவது நீரிழிவு நோயின் தாக்கமானது சிறிது சிறிதாக அதிகரித்துச் செல்வதனை காணக்கூடியதாக உள்ளது. மிக முக்கியமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில்மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் நீரழிவு தொடர்பான விழிப்புணர்வைஏற்படுத்துவது அவசியமானது.வடமாகாணத்தில் இளைஞர், யுவதிகள் மத்தியில் நீரிழிவின் தாக்கமானதுஅதிகரித்து செல்வதை காணக் கூடியதாக உள்ளது. இவ்வாறு நீரிழிவு நோயின்தாக்கம் அதிகரித்துச் செல்வதற்கு மிக முக்கியமான காரணமாக அமைவது எமதுவாழ்க்கை நடைமுறையில் ஏற்பட்ட மாற்றங்கள்.குறிப்பாக சொல்லப் போனால் தவறான உணவு பழக்க வழக்கங்கள் அப்பியாசம் அற்றவாழ்க்கை முறை என்பன மிக முக்கியமான காரணங்களாக உள்ளது.