வடக்கு மாகாணத்திற்கு வெளியே பணியாற்றும் வடக்கு சுகாதார சேவையாளர்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவிப்பு

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல சுகாதார சேவையாளர்கள் நாட்டின் பல
பகுதிகளிலும் முதல் நியமனங்களை பெற்று பணியாற்றி வருகிறார்கள் அவர்கள் வட
மாகாணத்திற்கு இடம்மாற்றம் பெற்று இங்கு பணியாற்ற விரும்புகிறார்கள்  என
அவர்களது பெற்றோர்கள் எனது கவனத்திங்கு கொண்டு வந்துள்ளனர்.எனவே அவ்வாறு
பணியாற்றுகின்றவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு வடக்கு மாகாண சுகாதார
சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் திலிப் லியனகே
தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி
குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

 பிற மாகாணங்களில் தற்போது முதல் நியமனம் பெற்று கடமையாற்றும் வடக்கு
மாகாணத்தில் சொந்த இடமாகக் கொண்டுள்ள சுகாதார சேவையாளர்களில் வடக்கு
மாகாணத்தில் சேவையாற்ற விரும்பும் எவராவது இருந்தால் அவர்கள் தமது
முழுப்பெயர் தற்போது கடமையாற்றும் சேவை நிலையம் அது அமைந்துள்ள மாவட்டம்
மற்றும்  தொடர்பு இலக்கம் ஆகிய விபரங்களை மாகாண சுகாதார சேவைகள்
பணிப்பாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிமனை, சுகாதாரக் கிராமம், பண்ணை,
யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் அல்லது  7778
42861என்ற வாட்ஸ் அப் செயலி ஊடாகவும் அனுப்பி வைக்குமாறும் சுகாதார
சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்