
வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் புகையிரத கடவைகளால் பயணம் செய்யும்போது மிகவும் அவதானமாக பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் தொழில் புரியும் தொடருந்து பாதுகாப்பு கடவை ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொழிற்சங்க புறக்கணிப்பு காரணமாக குறித்த கடவைகளில் பயணிக்கும் பயணிகள் மிக அவதானத்தடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
காவல்துறைக்கு கீழ் உள்ள தங்களது சேவையை புகையிரத திணைக்களத்தின் கீழ் கொண்டுர வேண்டும் என குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே புகையிரத கடவைகளால் பயணிக்கும்போது மிகவும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.