
வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் உட்பட பொது இடங்களில்
உணர்வெழுச்சியுடன் மாவீரர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்களால் 2022
மாவீரர் நாள் அஞ்சலிகள் செலுத்தப்பட்டன
மாவீரர் துயிலும் இல்ல வளாகங்கள் சிவப்பு மஞ்சள் கொடிகளால்
அலங்கரிக்கப்பட்டு மாவீரர்களை நினைவு கூறும் தாயக பாடல்கள் ஒலிக்கப்பட்டு
அந்த வளாகம் உணர்வுபூர்வமாக காணப்பட்டது
தமிழ் மக்களின் விடுதலைக்காக தங்கள் இன்ணுயிர்களை தியாகம் செய்த
மாவீரர்களது பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு
கண்ணீருடன் மாவீரர்களுக்கான தங்களது அஞ்சலி செலுத்தினார்கள்
மாவீரர் துயிலும் இல்லம் வளாகம் பொது மக்களால் நிரம்பி வழிந்தது அவர்கள்
கண்ணீருடன் மலர் தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்
மணி ஓசை எழுப்பப்பட்டு ஆறு ஐந்து மணிக்கு பொதுச்சுடரினை தெரிவு
செய்யப்பட்ட மாவீரர் ஒருவரின் உறவினர் ஒருவர் ஏற்றி வைத்தார் . அதனை
தொடர்ந்து ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டன
கோட்டாபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் கடந்த வருடங்களில் தடை
செய்யப்பட்டிருந்த மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வு ரணில் விக்கிரமசிங்க
ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் மீண்டும் இடம்பெற்றது.