
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம்
3ஆவது நாளாக திருகோணமலையில் முன்னெடுப்பு
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்
பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வலியுறுத்தி
திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இன்று (சனிக்கிழமை) திருகோணமலை பிரதான விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக
3ஆவது நாளாகவும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு ஒரே குரலில்
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்
பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வலியுறுத்த வேண்டும் என
வலியுத்தப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள்
மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.