
வடக்குக், கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கவே கூடாதெனதெரிவிக்கும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர ஆனால், அதிகாரப்பரவலாக்கத்தை கண்டிப்பாக வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.வரவு – செலவு திட்டம் மீதான நேற்றைய தினம் (17) பாராளுமன்ற விவாதத்தில்கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.வடக்குக், கிழக்கு பிரிக்கப்பட்டால் தமிழ்நாட்டில் பிரிவினைவாதகருத்துகள் வளர்ச்சியடையும். இதனால், பூகோளரீதியாக பலமான நாடாக மாறவேண்டும் ஏன்கிற இந்தியாவின் நோக்கத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படும்.இதனாலேயே புலிகளை தோற்கடிக்க இந்திய அமைதிக்காக்கும் படைகள் இலங்கைக்குஅனுப்பப்பட்டன. எனினும் இதில் ஏற்பட்டத் தோல்விகளாலேயே இந்தியா 13ஆவதுதிருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தது என்றார்.வடக்குக், கிழக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால் இலங்கையிலிருந்துஅம்மாகாணங்கள் பிரிந்துச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே,ஒருபோதும் அதிகாரப் பகிர்வை வழங்கக்கூடாது. மாறாக கண்டிப்பாக அதிகாரப்பரவலாக்கத்தையே வழங்க வேண்டும். இதுவே இந்தியாவுக்கும், இலங்கைக்கும்பாதுகாப்பு எனவும் தெரிவித்தார்.