வடக்கு ஆளுநருக்கு எதிராக ஜனாதிபதியிடம் முறையிட தீர்மானம் – சி வி கே சிவஞானம்

வடக்கு ஆளுநரால் நிறைவேற்றப்பட்ட நியதி சட்டம் தொடர்பில் ஜனாதிபதியிடம்முறையிட உள்ளோம் என வடக்கு மாகாண அவைத் தலைவர் சி வி கே சிவஞானம்தெரிவித்தார்.கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர்சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், “வடக்கு ஆளுநர் கடந்த 27ஆம் திகதி நியதிசட்டங்கள் என்று சொல்லப்படுகின்ற இரண்டினை வர்த்தமானியில்பிரசுரித்துள்ளார்.ஒன்று வாழ்வாதார தொடர்பான விடயம் மற்றும் சுற்றுலா தொடர்பான விடயங்கள்என்ற இரண்டு நியதிச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.இந்த இரண்டுமே ஆளுநருடைய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதும்,சட்டவிரோதமானதும், முறையற்றது. மாகாண சபைகள் சம்பந்தமான அரசியலமைப்புமற்றும் மாகாண சபைகள் கட்டளை சட்டத்திற்கு முரணானது.மாகாண சபை சட்டத்தின் படி ஆளுநர் தனது அதிகாரங்களை ஜனாதிபதியின்பணிப்புரையின் பெயரால் செயல்படுத்த முடியும் என்றுள்ளது.எனவே ஆளுநருக்கு சட்ட வாக்க அதிகாரம் எந்த இடத்திலும் கொடுக்கப்படவில்லை.எந்த இடத்திலும் ஆளுநர் சட்டம் இயற்றலாம் என்று குறிப்பிடப்படவில்லை.இவர் துணிவாக எதேர்ச்சியதிகாரமாக இரண்டு நியதி சட்டங்களைபிரகடனப்படுத்தியுள்ளார். இருக்கக் கூடிய அதிகாரங்களையும், ஜனாதிபதியின்பிரதிநிதியாக ஆளுநர் பறித்தெடுக்கின்றார் என்பதே விடயம். அதனை நாங்கள்வன்மையாக கண்டிக்கின்றோம்.இது பாரதூரமான ஒரு விடயம். அரசியல் ரீதியாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.அரசியல் ரீதியில், எங்களுக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களையும் பறிக்கக்கூடிய ஒரு செயற்பாடாக காணப்படுகின்றது.எனவே இந்த விடயம் தொடர்பில் உடனடியாக ஜனாதிபதிக்கு தெரியப்படுத்துவதற்குநாங்கள் தீர்மானித்து உள்ளோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்