வடக்கில் போதைப்பொருளை கட்டுப்படுத்த அரசாங்கம் பூரண ஒத்துழைப்புவழங்கும் -நீதி அமைச்சர்

வடக்கில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்கில் நீதி அமைச்சர் விஜயதாசராஜபக்ஷவின் பங்குபற்றலோடு வடமாகாண ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடலொன்றுஇன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.குறித்த கலந்துரையாடலில் வடமாகாணத்தில் போதைப்பொருள் பரவல் தொடர்பாகவும்எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன,யாழ்ப்பாண மாவட்ட செயலர் க.மகேசன், பொலிஸ் அதிகாரிகள்,இராணுவத்தினர்,கடற்படையினர், சுகாதார கல்வித் துறை அதிகாரிகள்,வைத்தியர்கள், துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.வடமாகாணத்தில் போதைப் பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு மத்தியஅரசாங்கத்தின் பூரணமான ஒத்துழைப்பு வழங்கப்படும் என நீதி அமைச்சர்விஜயதாஸ ராஜபக்ஸ உத்தரவாதம் வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்