வடக்கில் சரணாலயம் அமைக்க பொருத்தமான காணியை அடையாளம் காணுங்கள் – ஜனாதிபதி பணிப்பு

வடக்கு மாகாணத்தில் 1000 ஏக்கர் அளவில் சரணாலயத்தை அமைப்பதற்கு
பொருத்தமான நிலத்தை அடையாளம் காணுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், சரணாலயங்கள்
மற்றும் மிருகக்காட்சிசாலைகளை பார்வையிட தெற்கிற்கு வர வேண்டிய சூழல்
காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் பொருத்தமான காணிகளை ஆராயுமாறு வனஜீவராசிகள் மற்றும் வன
வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வனஜீவராசிகள் பணிப்பாளர்
நாயகம் ஆகியோருக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்