01.09.2023 அன்று 55வது படை பிரிவு தலைமையகத்திற்கு முன்பாக வட பகுதியில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சி மக்கள்போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இங்கு “போதைப்பொருள் பாவனையால் இப் பிரதேசத்தின் பாதுகாப்பும், இளம் தலைமுறையினரின் எதிர்காலமும் பாதிக்கப்படும்” எனக் கூறி போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் இதன்போது, இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சேவையையும், முகாம்களை அகற்றுவதன் மூலம் மக்களின் வாழ்வில் ஏற்படும் பாதிப்பையும் சுட்டிக்காட்டி, இராணுவத்தை அகற்ற வேண்டாம் என கோரி அரசிற்கு விண்ணப்பிப்தற்கான கடிதம் ஆளுநரின் ஊடாக கிளிநொச்சி மாவட்ட செயலகம், 55வது படை தளபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.