வடக்கிலிருந்து பெருமளவானோர் இந்தியாவிடம் தஞ்சம்

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இலங்கை இந்திய கடற்பரப்பின் மூன்றாம் மணல் தீடையில் இரண்டரை மாத கை குழந்தையுடன் 8 நபர்கள் இறக்கி விடப்பட்ட நிலையில், நேற்று (21)காலை குறித்து 8 பேரையும் இந்திய கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் இந்தியா, அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமான முறையில் கடல் வழி பாதை ஊடாக பயணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கை இருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மூன்றாம் மணல் தீடையில் இரண்டரை மாத கை குழந்தையுடன் மூன்று லிட்டர் தண்ணீருடன் 8 நபர்கள் படகோட்டிகளினால் இறக்கி விடப்பட்டிருந்தனர்.

மேலும் பசியும் பட்டினியுமாக கை குழந்தையுடன் தண்ணீர் மட்டும் குடித்து மூன்று நாட்களாக மணல் தீடையில் தஞ்சம் அடைந்தவர்களை இந்திய கடலோர காவல்படை நேற்று காலை மீட்டு மரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் ஏற்கனவே இலங்கையில் இருந்து வாழ வழியின்றி 134 நபர்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் ஒரே ஒரு மூதாட்டி மட்டும் உயிரிழந்து உள்ளார்.

இந்த நிலையில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த இரண்டரை மாத கைக்குழந்தையுடன் 8 நபர்கள் மூன்றாம் மணல் தீடையில் தஞ்சம் அடைந்தவர்களை இந்திய கடலோர காவல்படை மீட்டு மரைன் போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் மரைன் பொலிஸார் அவர்களை விசாரணை நடத்தி மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்