
பழுதடைந்த புகையிரத பாதையை சீரமைக்கும் வரை ஜனவரி 15 ஆம் திகதி முதல் 5
மாதங்களுக்கு மஹவயிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான புகையிரத சேவை
நிறுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல
குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனவரி 15 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மஹவயில் இருந்து
யாழ்ப்பாணம் செல்லும் புகையிரதத்தை நிறுத்தப்படவுள்ளது.
புகையிரத பாதை திருத்தப்படாததால் மஹவயில் இருந்து செல்ல முடியாத நிலை
ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக இச் சேவை நிறுத்தப்பட்டு பாதை
புனரமைப்பு பணிகள் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.