
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பித்த அவ்வணிக்கும், சென். ஜோன்ஸ் கல்லூரிக்குமிடையிலான 115ஆவது வடக்கின் பெருஞ் சமரின் தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 167 ஓட்டங்களை சென். ஜோன்ஸ் பெற்றுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற யாழ். மத்தி, சென். ஜோன்ஸை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்திருந்தது.
துடுப்பாட்டத்தில், ஹரீசன் 41, அன்டன் அபிஷேக் 40 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கவிதர்சன், விதுசன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இந்நிலையில் தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் யாழ். மத்தி, இன்றைய முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி ஆறு ஓட்டங்களைப் பெற்றுள்ளது.