வடகொரியா அதிபர்  பாலர் பாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட உத்தரவு

புதிய பாடத் திட்டத்தின்கீழ் ஜனாதிபதி கிம் ஜாங்-உன்னின் “மகத்துவம்” பற்றி அறிய வடகொரியாவில் உள்ள பாலர் பாடசாலை மாணவர்கள் ஒரு நாளைக்கு 90 நிமிடங்கள் வரை ஒதுக்க வேண்டும் என்று வடகொரிய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி, கிம் யோ-ஜாங், இந்த ‘சிறப்பான கல்வி’ குறித்த புதிய உத்தரவை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த உத்தரவு “வட கொரியாவின் தலைமைக்கு விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வளர்ப்பதை” நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய உத்தரவு ஓகஸ்ட் 25 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது, இதற்கு முன்னதாக, பாலர் பாடசாலை மாணவர்கள் கிம் ஜாங் உன் பற்றிய 30 நிமிட வகுப்பில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டியிருந்தது.

“கிம் ஜாங் உன் வெறும் ஐந்து வயதாக இருந்தபோது, அவர் ஒரு பிரகாசமான குழந்தையாக இருந்தார், அவர் “ஒரு படகு சவாரி செய்தார், இலக்கு பயிற்சி செய்தார், படிக்க விரும்பினார்” என்று புதிய பாடத்திட்டம் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு பயிற்றுவிக்கிறது எனக் கூறப்படுகிறது.

தற்போது கிம் யோ ஜாங் வட கொரியாவில் இரண்டாவது கட்டளையிடும் சக்தியாக மாறியுள்ளார் என்று தென் கொரியாவின் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்