
வடகொரியாவில் குழந்தைகளுக்கு துப்பாக்கி, வெடிகுண்டு என பெயர்களை மாற்றி வைக்கும்படி, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெயர் என்பது ஒவ்வொருவரின் அடையாளம். அதனாலேயே தங்களது குழந்தைகளுக்கு பேர் வைக்கும்போது, பல நாள் யோசித்து பெயர்களைத் தேர்வு செய்வார்கள் பெற்றோர்கள். குறிப்பாக தங்களது குழந்தைகளின் பெயர் மென்மையாக, கேட்பதற்கு இனிமையாக, வெற்றியைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக இருக்கும்.
ஆனால், குழந்தைகளுக்கு வன்முறையைத் தூண்டும் வகையில் பேர் வைக்க வேண்டும் என அரசே வலியுறுத்தினால், நிச்சயம் அது பெற்றோருக்கு அதிர்ச்சியாகத்தானே இருக்கும். வடகொரியாவில்தான் இப்படி ஒரு அதிர்ச்சியை மக்களுக்கு கொடுத்திருக்கிறார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங்.