
ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்தன இன்று சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.
ரணில் விக்கிரமசிங்க கடந்த தினம் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் வெற்றிடமான ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கே வஜிர அபேவர்தன இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.