
கடந்த வாரம் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் இரண்டு. ஒன்று மோகன் இயக்கத்தில் திரௌபதி. மற்றொன்று தேசிங் பெரியசாமி இயக்கத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்று ஓடிகொண்டிருக்கின்றன.
சாதி என்ற பெயரில் நடக்கும் ஆணவக்கொலைகளை எதிர்க்கும் படமாகவும், நாடக காதலை அரங்கேற்றி பண மோசடி செய்வோரை வெளித்து வாங்கும் படமாக ரிச்சர்டு, ஷீலா ஆகியோரின் நடிப்பில் திரௌபதி படம் மிரட்டலாக வெளியானது. ஆரம்ப நாட்களில் நல்ல விமர்சனங்களால் படம் வசூலை அள்ளி வந்தது. பின் படிப்படியாக வசூல் குறைந்துள்ளது என்பதே உண்மை.
அதே வேளையில் துல்கர் சல்மான், ரக்ஷன், ரிது வர்மா நடிக்க ஸ்பெஷலான வேடத்தில் போலிஸ் அதிகாரியாக இயக்குனர் கௌதம் மேனன் நடிக்க கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் நல்ல வரவேற்பை பெற்று ஜாலியான படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வசூலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இதில் கடந்த ஒரு வாரத்திற்கான சென்னை வசூலை பார்க்கலாம். பாக்ஸ் ஆஃபிஸ் லிஸ்ட் இதோ
- கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – ரூ 1.39 கோடி
- திரௌபதி – ரூ 83 லட்சம்
- ஓ மை கடவுளே – ரூ 2.59 கோடி