
வசந்த முதலிகே விவகாரத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐக்கியநாடுகளின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டிதெரிவித்துள்ளார்.அனைத்து பல்கலைகழக மாணவர் சம்மேளனத்தின் இரு ஏற்பாட்டாளர்களையும் விடுதலைசெய்யுமாறு கோரி கொழும்பில் உள்ள ஐநா அலுவலகத்தின் முன்னாள்சத்தியாக்கிரஹ போராட்டத்தை மேற்கொண்டவர்களிடம் மகஜை பெற்றுக்கொண்டபின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அனைத்து பல்கலைகழக மாணவர் சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் வசந்தமுதலிகேயையும் அனைத்து பல்கலைகழக பிக்குமார் சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர்கல்வேவ ஸ்ரீதம்ம தேரரையும் விடுதலை செய்யக்கோரியே இந்த சத்தியாக்கிரஹபோராட்டம் இடம்பெறுகின்றது.இருவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.சத்தியாக்கிரஹ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இலங்கைக்கானஐக்கியநாடுகளின் வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கரிடம் மகஜரைகையளித்துள்ளனர்.மகஜரை பெற்றுக்கொண்ட ஐநாவின் பிரதிநிதி ஐநா இந்த விவகாரத்தை உன்னிப்பாகஅவதானித்து வருகின்றது கையளி;க்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் அவசியமானநடவடிக்கைகளை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.நான் கடிதம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பேன் எவ்வளவு நேரம் இங்கு நின்றுபோராட்டத்தில் ஈடுபடவிருப்பமோ அவ்வளவு நேரம் நில்லுங்கள் தயவு செய்துஉங்கள் கருத்தை அமைதியாக வெளிப்படுத்துங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.