வசந்த முதலிகே தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை கைது செய்து தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது எனவும், அவரது தடுப்புக் காவலை செல்லுபடியற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி ரவிஹர பின்னதுவகே ஊடாக இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர், பயங்கரவாத எதிர்ப்பு பணியகத்தின் பணிப்பாளர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்