வசந்த முதலிகேயை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டம் : மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து
வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த
முதலிகே  உட்பட மூவரை உடனடியாக விடுதலை செய்யுமாறும், அரசாங்கத்தின்
அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அனைத்து பல்கலைக்கழக மாணவர்
ஒன்றியத்தினர் களனி பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று மாலை(4) எதிர்ப்பு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், சிவில் அமைப்பினர் மற்றும்
சமூக சேவை அமைப்பினர் ஒன்றிணைந்து முன்னெடுத்த இந்த பேரணி மீது பொலிஸார்
கண்ணீர் புகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.

கொழும்பு –கண்டி பிரதான வீதியை இடைமறித்து களனி பல்கலைக்கழகத்துக்கு
முன்பாக இந்த ஆர்ப்பாடம் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்