வங்காளதேச கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் ஒத்தி வைப்பு!

வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் செய்து போட்டிகளில் விளையாட முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக வங்காளதேச அணியின் இலங்கை சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்படுகிறது என ஐ.சி.சி. தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

ஏற்கனவே, ஆகஸ்டு மற்றும் செப்டம்பரில் நடைபெற இருந்த நியூசிலாந்து, வங்காளதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்