லெபனானில் தனது வங்கி பணத்தை எடுப்பதற்காக துப்பாக்கி முனையில் வங்கி ஊழியர்களை மிரட்டிய நபர் – குவியும் பாராட்டுகள்

வங்கியில் பணத்தை எடுக்கமுடியாததன் காரணமாக ஆறு மணித்தியாலங்கள் வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் வைத்திருந்த லெபனான் பிரஜைக்கு பாராட்டுகள் குவிகின்றன.

லெபானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் பெறக்கூடிய பணத்தின் அளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்த நபர் பெட்ரோலை ஊற்றிய பின்னர் துப்பாக்கி முனையில் தனது மருத்துவமனை செலவுகளிற்கு பணத்தை கோரியுள்ளார்.

அவரது நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது வங்கிக்கு வெளியே திரண்ட மக்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

எனினும் பேச்சுவார்த்தைளின் மூலம் இந்த பதற்றமான சூழல்  பின்னர் முடிவிற்கு வந்துள்ளது,அந்த நபருக்கு 35000 டொலரை எடுப்பதற்கான அனுமதியை வங்கி வழங்கியுள்ளது.

பொலிஸார் அவரை அழைத்து சென்றுள்ளனர் அவருக்கு எதிராககுற்றச்சாட்டுகள் சுமத்தப்படுமா என்பது குறித்து  தகவல்கள் வெளியாகவில்லை.

குறிப்பிட்ட நபரின் குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பணம் தேவைப்பட்டது என லெபனான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வங்கிக்கு வெளியே காணப்பட்ட சந்தேகநபரின் மனைவியும்  சகோதரரும் தங்களிற்கு உரிமையுள்ள விடயத்தை பெறுவதற்காக அனைவரும் இதனை செய்யவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

வங்கிகளில் பொதுமக்கள் எடுக்ககூடிய பணத்தின் அளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் லெபனானில் மக்கள் மத்தியில் சீற்றம் காணப்படுகின்றது 

லெபனானில் கடும் பொருளாதார நெருக்கடி காணப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்