லெசீ, கொஸ்கொட தாரக்கவினால் சிறைச்சாலை அதிகாரிகள் சிலருக்கு உயிர் அச்சுறுத்தல்!

பூசா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளான கொஸ்கொட தாரக்க மற்றும் லெசீ ஆகிய குழுவினால் சிரேஷ்ட சிறைச்சாலை அதிகாரிகள் சிலருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கைதிகள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட போது, அது தொடர்பில் ஆராய்வதற்காக சென்ற குழுவினருக்கே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தாம் உள்ளிட்ட அதிகாரிகள் சிலருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தமது வலைத்தளம் தொடர்ந்தும் இயங்குவதாகவும் தம்மிடம் கைத்துப்பாக்கிகள் உள்ளதாகவும் தெரிவித்து குறித்த சந்தேக நபர்கள், தாம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்து நாம் பொலிஸாரிடம் வினவியபோது, சம்பவம் குறித்து சிறைச்சாலை அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முகநூலில் நாம்