லபுக்கலையில் தனியார் பஸ் விபத்து: நால்வர் காயம்

நுவரெலியா பகுதியிலிருந்து  லபுக்கலை பகுதியை நோக்கி பயணித்த தனியார்  பஸ் ஒன்று நுவரெலியா – கண்டி பிரதான வீதியில்  லபுக்கலை மேற்பிரிவு பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியா பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த பஸ்ஸே நேற்று (14)  மாலை விபத்துக்குள்ளானது.

பஸ்ஸில் 30ற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளதாகவும், விபத்தின் போது, 4 பேர் மாத்திரம் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

 சாரதியால் பஸ்ஸின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 4 பேரும், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு காயமடைந்தவர்களில் சிறுவர்களும் அடங்குகின்றனர் என  வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இவ்விபத்து தொடர்பில் நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்