லண்டனில் புதிதாக பிறந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று! சோதனையில் உறுதியானது

லண்டனில் புதிதாக பிறந்த குழந்தை ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதிதாக பிறந்த குழந்தைக்கு லண்டனில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தையின் தாய் நிமோனியா சந்தேகத்திற்குரிய நிலையில் லண்டனில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் தனி இடமொன்றில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் நேற்று இரவு தனது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

இந்நிலையில், குழந்தை பிறந்த சில நிமிடங்களில் சோதனை செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது

முகநூலில் நாம்