லண்டனில் வீடொன்றில் பரவிய தீயினால் நான்கு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் பிரித்தானியாவில் தென்கிழக்கு லண்டனில் வியாழன் மாலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Hamilton சாலையில், Bexleyheath கட்டிடமே தீப்பிழம்புகளால் சூழப்பட்டது.
பாதிக்கப்பட்ட உறவினர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், 4 மற்றும் 1 வயதான இரு குழந்தைகள், குழந்தைகளின் பாட்டி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட குறித்த குடும்பம் மூன்று மாதங்களுக்கு முன்புதான் இந்த வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
தீ பரவிய சந்தர்ப்பத்தில் மனைவி தனது கணவனுக்கு அழைப்பை மேற்கொண்டு தீ தீ என கதறியுள்ளதாக அவரது கணவர் கூறியுள்ளார்.
கணவனின் மைத்துனராகக் கருதப்படும் ஒருவர், மேல்மாடி ஜன்னலில் இருந்து குதித்ததில் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளார்.