இலங்கை போர்க்குற்ற விசாரணை | ஐ.நாவில் இந்தியா ஆதரிக்க வேண்டும்: அன்புமணி

இலங்கை போர்க்குற்ற விசாரணையை இந்தியாவில் நடத்துவதற்கான தீர்மானத்தை
ஐ.நா மனித உரிமை பேரவையில் நமது நாடு ஆதரிக்க வேண்டும் என்று பாமக தலைவர்
அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
”இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய
அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த வரைவுத் தீர்மானத்தை ஐ.நா. மனித
உரிமைப் பேரவையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 நாடுகள் கொண்டு
வந்துள்ளன. ஈழப்போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு
நீதி வழங்கும் நடவடிக்கைகளுக்கு வலு சேர்க்கும் வகையிலான இந்த வரைவுத்
தீர்மானம் வரவேற்கத்தக்கதாகும் எனவே இந்தியா இதனை ஐநாவில் ஆதரிக்க
வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்