ரோகித் சர்மா இருந்திருந்தால் நியூசிலாந்து டெஸ்ட் தொடர் முடிவு வேறுமாதிரி இருந்திருக்கும்: மெக்கிளேனகன் சொல்கிறார்

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்தியா 5-0 எனக் கைப்பற்றியது. 5-வது போட்டியின்போது ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஒட்டுமொத்த தொடரில் இருந்தும் அவர் விலகினார்.


அதன்பின் நடைபெற்ற ஒருநாள் தொடரை 0-3 எனவும், டெஸ்ட் தொடரை 0-2 எனவும் இந்தியா இழந்தது. டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா இருந்திருந்தால் தொடரின் முடிவு வேறுமாதிரி இருந்திருக்கும் என நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மெக்கிளேனகன் தெரிவித்துள்ளார்.
தற்போது கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் உரையாடி பொழுதை கழித்து வருகின்றன.

மெக்கிளேகனிடம் ரசிகர் ஒரு கேட்ட கேள்விக்கு மேற்கண்டவாறு மெக்கிளேனகன் பதில் அளித்துள்ளார். இந்தத் தொடரில் விராட் கோலி நான்னு இன்னிங்சிலும் சேர்த்து 38 ரன்கள் மட்டுமே அடித்தார். நியூசிலாந்து தொடரில்  டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என 11 இன்னிங்சில் 218 ரன்கள் அடித்திருந்தார்.

முகநூலில் நாம்