ரூ.215 கோடி விவகாரம்; பாலிவுட் நடிகை ஜாக்குலின் மீது குற்றஞ்சாட்டு

இந்தியரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் இலங்கையைச் ​சேர்ந்த பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.

215 கோடி ரூபாய் மிரட்டி பணம் பறித்த வழக்கில், பாலிவுட் நடிகை ஜாக்குலின் குற்றவாளியாக அமலாக்க இயக்குனரகம் குறிப்பிட்டுள்ளது.

பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை அமலாக்க இயக்குனரகம் இன்று (17) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுகேஷ் சந்திரசேகர் மிரட்டி பணம் பறிப்பவர் என்பது ஜாக்குலினுக்கு தெரியும் என்றும் அவருக்கு உடந்தையாக ஜாக்குலின் இருந்தார் என்பதும் அமலாக்க இயக்குனரகம் கூறுகிறது.

முன்னதாக, சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலினுக்கு 10 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுகளை அனுப்பியதை ED கண்டறிந்துள்ளது. அதனால் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க இயக்குனரகம் இதுவரை நடிகையின்  7 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது.

ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்பு இருப்பதாக கூறி அமலாக்க இயக்குனரகம் பலமுறை விசாரணை நடத்தியது.

சுகேஷ் மீது 32 வழக்குகள் 

சுகேஷ் சந்திரசேகர் மீது 32 கிரிமினல் வழக்குகள் உள்ளதால், பல மாநில காவல்துறை மற்றும் மூன்று மத்திய ஏஜென்சிகள் – சிபிஐ, அமலாக்க இயக்குநரகம் மற்றும் வருமான வரி ஆகியவற்றால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

புதுடெல்லி தொழிலதிபரின் மனைவியிடம் போலியான அழைப்பு மூலம் ரூ.215 கோடி பணம் பறித்ததாக சுகேஷ் சந்திரசேகர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அவர் டெல்லி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

பிறகு அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் சுகேஷ் ​பிரதமர் அலுவலகம், சட்ட அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரி போல் நடித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பணம் பறித்துள்ளது தெரியவந்தது.

அதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு ஜாமீன் வழங்குவதாகவும், அவர்களின் மருந்து வணிகத்தை நடத்துவதாகவும் சுகேஷ் தொலைபேசி வாயிலாக கூறியுள்ளார்.  அமமுக தலைவர் டிடிவி தினகரன் மீதான மோசடி வழக்கில் சுகேஷ் சிக்கியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக அவர் ஏப்ரல் 4ஆம் திகதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்