ரூ.1 லட்சம் கரண்ட் பில்…. கொந்தளித்த கார்த்திகா!

கோ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கார்த்திகா நாயர். இவர் நடிகை ராதாவின் மகள். கோ படத்திற்கு பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்தார்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மின்சார கட்டணத்தை கணக்கிடுவதில் சிக்கல் எழுந்தது. அதன் பின் போடப்பட்ட மின் கட்டணம் மிகவும் அதிக அளவில் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் கார்த்திகா நாயர் அதிக மின் கட்டணம் தொடர்பாக டுவிட்டரில் கோபத்துடன் தெரிவித்துள்ளார். ஆனால் இது தமிழ்நாட்டில் இல்லை மும்பையில். இதுபற்றி அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது..

“என்ன விதமான மோசடியை மும்பையில் செய்து கொண்டிருக்கிறார்கள். ஜூன் மாத மின் கட்டணம் மட்டும் ஒரு லட்சம்.. (அவர்களால் மீட்டர் ரீடிங் செய்ய முடியாத நிலையில், அவர்களின் தோராய கணக்கு படி) மும்பையில் இருக்கும் மற்ற பலரிடம் இருந்தும் இதுபோன்ற புகார்களை நான் கேட்கிறேன்” என கார்த்திகா நாயர் அந்த குறிப்பிட்டுள்ளார்.

முகநூலில் நாம்