ரிஷாட் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாம் கைது செய்யப்படுவதை தடுக்க கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய குறித்த மனுவை எதிர்வரும் நவம்பர் மாதம் 06ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்தது.

குறித்த மனு இன்று குமுதினி விக்ரமசிங்க மற்றும் சோபித ராஜகருண ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மனுதாரர் சார்ப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, மனுதாரரை கைது செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்க சட்டமா அதிபருக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தர்.

இருப்பினும் தன்னுடைய கட்சிக்காரர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள காரணத்தால் குறித்த மனுவை தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்துவதா இல்லையா என தனக்கு இதுவரையில் எவ்வித அறிவுறுத்தலும் வரவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அதனடிப்படையில் குறித்த மனு மீதான விசாரணையை நவம்பவர் 6 ஆம் திகதி வரையில் ஒத்திவைத்ததுடன், அன்றைய தினம் மனுதாரர் சார்பான உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்