ரியல் சோசிடட் அணியை வீழ்த்தி ரியல் மாட்ரிட் அணி வெற்றி

லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் சோசிடட் அணியை வீழ்த்தி ரியல் மாட்ரிட் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

நேற்று இடம்பெற்ற இப்போட்டியில் முதல் 10 ஆவது நிமிடத்தில் ரியல் சோசிடட் அணி சார்பாக மைக்கேல் ஓயர்சபால் முதலாவது கோலை புகுத்தினார்.

இதனை அடுத்தது 40, 43 ஆவது மற்றும் 76, 79 ஆவது நிமிடங்களில் ரியல் மாட்ரிட் அணி அடுத்தடுத்து கோல்களை புகுத்தியது.

இறுதியில் 4-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்ற ரியல் மாட்ரிட் அணி, புள்ளிபட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளதோடு ரியல் சோசிடட், ஆறாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்