ராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: 2 மாற்றங்களுடன் இந்தியா முதலில் பேட்டிங்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது போட்டியிலும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் தோற்றுள்ளார். இதனால் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டபட்டதில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் ரிஷப் பண்டுக்குப் பதிலாக மணிஷ் பாண்டேவும், ஷர்துல் தாகூருக்குப் பதில் நவ்தீப் சைனியும் இளம் இறக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியா அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

முகநூலில் நாம்