
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை
பெற்ற இலங்கையை சேர்ந்த நால்வரும் முழுமையான விடுதலை வாழ்வை அனுபவிக்க
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை
செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல்
தெரிவித்துள்ளார்.
அவரால் வெள்ளிக்கிழமை (18) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு
தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை பெற்ற இலங்கையை சேர்ந்த
நால்வரும் முழுமையான விடுதலை வாழ்வை அனுபவிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்பதோடு அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது
தொடர்பாக நால்வரின் விருப்பத்திற்கு அமைய தீர்மானிக்க வேண்டும் என
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தமிழக அரசிடமும்
இந்திய மத்திய அரசிடமும் வேண்டுகோள் விடுகின்றது எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.