ராஜா ராணி சீரியல் காதல் ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு! அம்மா அப்பா ஆன ஆல்யா சஞ்சீவ்

சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து நிஜ வாழ்க்கையில் ரியல் ஜோடி ஆனவர்கள் ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ். ராஜா ராணி என்ற ஒரு சீரியல் இவர்களில் வாழ்க்கையை மாற்றி போட்டுவிட்டது எனலாம்.

சினிமாவில் பிரபலங்கள் போல இவர்களுக்கு பெரும் ரசிகர்கள், ரசிகைகள் வட்டாரம் வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியலால் பெருகியது. பின் நாட்களில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர்கள் எளிமையான முறையில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன் ஆல்யா கர்ப்பமானார்.

அண்மையில் ஆல்யாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிலையில் ஆல்யாவுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ள செய்தியை ஆல்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். சினிஉலகமும் அவர்கள் மூவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

முகநூலில் நாம்