ராகவா லாரன்ஸின் அடுத்தப்படம், முன்னனி இசையமைப்பாளருடன் கைக்கோர்கின்றார்

ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமானவர். அப்படியே மெல்ல ஒரு சில படங்களில் நடித்து தற்போது வெற்றிகரமான தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் என கலக்கி வருகின்றார்.

இவர் அடுத்து 5 ஸ்டார் கதிரேஷன் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளாராம்.

ஜிவி, லாரன்ஸ் முதன் முதலாக சினிமாவில் இணைந்து பணியாற்றுவது இதுவே முதன் முறையாம்.

மேலும், லாரன்ஸ் தற்போது காஞ்சனா2 ஹிந்தி ரீமேக்-ஆன லட்சுமி பாம் படத்தின் படப்பிடிப்பில் செம்ம பிஸியாகவுள்ளார்.

இப்படத்தில் அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி ஆகியோர் நடித்து வருகின்றனர், இப்படம் முடிந்த கையோடு இதன் படப்பிடிப்பில் கலந்துக்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஜிவி-யும் தற்போது சூரரைப் போற்று, வாடிவாசல் பிறகு ஒரு விஜய் படம் என செம்ம பிஸியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.முகநூலில் நாம்