
ரஷ்யாவின் Aeroflot விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று, இலங்கையிலிருந்து வௌியேறுவதற்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் இன்று(06) இடைநிறுத்தியது.
கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் நகர்த்தல் பத்திரமொன்றை முன்வைத்து விடுத்த வேண்டுகோளை கருத்திற்கொண்டு நீதிமன்றம் இந்த தடை உத்தரவினை இடைநிறுத்தியுள்ளது.