ரஷ்ய படையினர் சிவெரோடோனெட்ஸ்க் நகரின் மையப் பகுதியை நெருங்கியது

ஷ்யப் படைகள் உக்ரைனின் சிவெரோடோனெட்ஸ்க் நகரின் மையப் பகுதியை நெருங்கி விட்டதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெற்ற தீவிர மோதலை அடுத்து அவர்கள் முன்னேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நகரத்தின் பாதிக்கு மேல் இப்போது செச்சென் போராளிகள் உட்பட ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை உக்ரைனுக்கு பொருளாதார, மனிதாபிமான மற்றும் தற்காப்பு இராணுவ உதவிகளை பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

மேலும் ரஷ்யா மற்றும் பெலரஸ் மீது பிரித்தானியா மேலதிக தடைகளை விதித்து வருகிறது என்றும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்