ரஷ்யப் படைகளிடமிருந்து மீட்கப்பட்ட இசியத்தில் 440 உடல்கள் அடங்கிய புதைகுழி கண்டுபிடிப்பு

சில நாட்களுக்கு முன்பு ரஷ்யப் படைகளிடமிருந்து மீட்கப்பட்ட வடகிழக்கு நகரமான இசியத்தில் 440 உடல்கள் அடங்கிய வெகுஜன புதைகுழியை உக்ரைனிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதில் ஷெல் மற்றும் வான்வழித் தாக்குதல்களால் கொல்லப்பட்ட சிலரின் உடல்களும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வார இறுதியில் ஆயிரக்கணக்கான ரஷ்ய துருப்புக்கள் இசியம் நகரத்தை விட்டு பின்வாங்கினர். நகரத்தை ஆக்கிரமித்து கார்கிவ் பிராந்தியத்தில் ஒரு தளவாட மையமாக பயன்படுத்திய பின்னர் அங்கிருந்து வெளியேறிய போது அவர்கள் ஏராளமான வெடிமருந்துகளையும் உபகரணங்களையும் விட்டுச் சென்றனர்.

இந்த நிலையில், இசியத்தில் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் புலனாய்வாளர்கள் அந்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்ட வெடிபொருட்கள் ஏதேனும் உள்ளதா என ஆய்வு செய்தனர். இதன்போதே இந்த புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.

ரஷ்யா எல்லா இடங்களிலும் படுகொலைகளை விட்டுச் செல்கின்றது அதற்கு ரஷ்யா பொறுப்பேற்றே ஆக வேண்டும் என கூறிய உக்ரைன் ஜனாதிபதி கிய்வின் புறநகரில் உள்ள புச்சாவில் நடந்த படுகொலைகளை நினைவுக்கூர்ந்தார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், ‘ஐசியத்திற்கு வெளியே ஒரு காட்டில் மரங்களுக்கு மத்தியில் எளிய மர சிலுவைகளுடன் கூடிய நூற்றுக்கணக்கான கல்லறைகள் இருந்தன. அவற்றில் பெரும்பாலானவை எண்களால் மட்டுமே குறிக்கப்பட்டன. ஒரு பெரிய கல்லறையில் 17 உக்ரைனிய வீரர்களின் உடல்கள் இருந்ததாகக் குறிக்கும் அடையாளமாக இருந்தது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்