ரஷிய பிரதமர் மிக்கைல் மிசுஸ்டின் கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமடைந்தார்!

ரஷிய பிரதமர் மிக்கைல் மிசுஸ்டினுக்கு கடந்த மாதம் 30-ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் சிகிச்சை பெற்றபடியே அலுவலக பணியை பார்த்து வந்தார்.

இந்நிலையில் மிக்கைல் மிசுஸ்டின் கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமடைந்து விட்டார். கேபினட் தலைமையகம் வந்து பணிகளை மேற்கொண்டார். அதிபர் புதின் உடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த இருக்கிறார் என மிசுஸ்டின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ரஷியாவில் புதினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உள்பட பல மந்திரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

முகநூலில் நாம்