ரஷியாவில் சுரங்கப்பணியின் போது மீத்தேன் விபத்து – 2 பேர் பலி

ரஷிய நாட்டின் கோமி ரிபப்ளிக் என்ற பகுதியில் நிலக்கரி சுங்கம் ஒன்று அமைந்துள்ளது. அந்த சுரங்கத்தில் இன்று 106 பணியாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர்.


அப்போது அந்த சுரங்கத்தில் இருந்த ஒரு மீத்தேன் எரிவாயு குழாய் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் சுரங்க இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப்படையினர் சுரங்கத்தில் சிக்கித்தவித்த 43 பேரை உயிருடன் மீட்டனர். மேலும் சிலர் சுரங்கத்திற்குள் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.    முகநூலில் நாம்