ரயில் நிலையத்தில் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய 100 பேர்

கம்பஹா ரயில் நிலையத்தில் பயண அனுமதிச் சீட்டு இன்றி ரயிலில் பயணித்த 100 பேருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கம்பஹா ரயில் நிலையத்தில் 4 மணிநேரம் முன்னெடுத்த சுற்றிவளைப்பிலேயே இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரிடம் 3 ஆயிரத்து 20 ரூபா வீதம், மூன்று இலட்சத்துக்கும் அதிக தொகை தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை ரயில் நிலையங்களை மையப்படுத்தி இவ்வாறான சுற்றிவளைப்புக்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்