
ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட ஆசனங்களுக்கான கட்டணம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, முன்பதிவு செய்யப்பட்ட ஆசனங்களுக்கான கட்டணம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் 30 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ரயில்வே திணைக்களத்திற்கு நாளாந்தம் கிடைக்கும் வருமானம் 15 மில்லியனாக காணப்படுவதுடன், நாளாந்த எரிபொருளுக்கான செலவு 40 மில்லியன் ரூபாவாக அமைந்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
ரயில் பயணச்சீட்டுக்கான கட்டணம் பஸ் கட்டணத்தை விடவும் 25 வீதத்தால் குறைவாகவே காணப்படுவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.