ரஜினி 108 கோடி… விஜய் எத்தனை கோடி?

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அண்ணாத்த’ படத்துக்கு, ‘தர்பார்’ படத்துக்கு வாங்கிய சம்பளத்தைவிடக் குறைவாகவே வாங்கியிருக்கிறார் ரஜினி. ‘தர்பார்’ படம் சரியாகப் போகாததால் இந்த சம்பள வீழ்ச்சி நிகழ்ந்தது.

தமிழ்நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் என்கிற போட்டாபோட்டி ரஜினிகாந்த்துக்கும், விஜய்க்கும் இடையே நிகழ்ந்துவருகிறது.

கடந்த சில படங்களாக வியாபார ரீதியாக ரஜினியை முந்தியிருக்கிறார் விஜய். ரஜினியின் ‘தர்பார்’ வசூலைவிட ‘பிகில்’ படத்தின் வசூல் அதிகம். அதேப்போல் ‘தர்பார்’ படத்துக்காகத்தான் ரஜினிகாந்த் மிக அதிகபட்சமாக, தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் வாங்காத சம்பளமாக 108 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றார். இப்படத்தை இலங்கைத்தமிழரான சுபாஷ்கரனின் ‘லைகா’ நிறுவனம் தயாரித்தது.

தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகர் சம்பளம் இதுதான். ஆனால், ரஜினியின் இந்த சம்பளம் ‘அண்ணாத்த’ படத்தில் குறைந்துவிட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ‘தர்பார்’ படத்துக்கு வாங்கிய சம்பளத்தைவிடக் குறைவாகவே வாங்கியிருக்கிறார் ரஜினி. ‘தர்பார்’ படம் வசூல் ரீதியாக சரியாகப் போகாததால் இந்த சம்பள வீழ்ச்சி நிகழ்ந்தது.

ஒருபக்கம் ரஜினியின் சம்பளம் குறைய விஜய்யின் சம்பளம் உயர்ந்துகொண்டே போகிறது. ‘பிகில்’ படத்தில் 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய விஜய், ‘மாஸ்டர்’ படத்துக்கு 80 கோடி ரூபாய் சம்பளம் பேசினார். இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்துக்கு கிட்டத்தட்ட இதே சம்பளம் வாங்குகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் தொடங்கி ஜூலை இறுதிக்குள் முடிவடையுமாம்.

இந்தப்படம் முடிந்ததும் ஆகஸ்ட் மாதவாக்கில் விஜய் 66 படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்படத்தை தயாரிக்க ஐசரி கணேஷின் ‘வேல்ஸ்’ நிறுவனத்துக்கும், ‘பிகில்’ படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துக்கும் இடையே பெரிய போட்டி நிலவுகிறது. இந்தப்படத்துக்கு விஜய்யின் சம்பளம் 100 கோடியைத்தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இந்தப்படத்தில் 100 கோடியைத்தொட்டால் அதிக சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா நடிகர்களில் ரஜினியை முந்தி முதலிடம் பிடிப்பார் விஜய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்