ரஜினி விசயத்தில் சரியான பதிலடி! அதை கைப்பற்றாமல் இதை மாற்ற முடியாது – கமல்ஹாசன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல்ஹாசனும் சினிமாவில் பெரும் சாதனை செய்தவர்கள். உலகம் முழுக்க அவர்களின் புகழ் பரவியுள்ளது. ரசிகர்களின் செல்வாக்கு இருவருக்கும் அதிகம்.

இவர்களின் படத்திற்கு தான் போட்டியே தவிர இவர்களின் படங்களுக்கு அல்ல. இருவரும் தற்போது அரசியல் வட்டத்திற்குள் இறங்கிவிட்டார்கள். ஆனால் ரஜினி தமிழர் என அவரை அடிக்கடி விமர்சிக்கும் சிலர் கூறிவந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கமல்ஹாசன் அல்ஜீப்ரா – தி ஆர்ட்ஸ் அண்ட் ஐடியாஸ் கிளப் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.

இதில் பேசியவர் ரஜினி இப்போது பெருமை மிக்க தமிழர். அவர் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டுமென விரும்புகிறேன்.

ஹேராம் படத்தின் போதே நான் அரசியலுக்கு வந்துவிட்டேன். இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையை அப்போதே அறிகுறிகளாக கண்டதால் அத் திரைப்படத்தை எடுக்க தூண்டுகோலாக இருந்தது. ஆனால் ஹேராம் படத்தை இப்போது எடுப்பது கடினம்.

ஜனநாயகம் தவறானது அல்ல, அதை நாம் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் திராவிட அரசியல் ஆதிக்கம் காலத்தின் தேவையால் வெளிப்பட்டது. பின் அது கட்சிகளின் தேவையாக மாறியது.

அதை தமிழ்நாட்டில் மாற்ற வேண்டிய அவசியமில்லை. மிக ஊழல் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது. அதிகாரத்தை கைப்பற்றாமல் ஊழல் முறையை மாற்ற முடியாது என கூறியுள்ளார்.

முகநூலில் நாம்